4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்

12 ஸ்வரஸ்தான விபரமும் -

 சட்ஜப் பஞ்சமத்தைத் தவிர மீதிய ஐந்து ஸ்வரங்கள் கோமள, தீவர பேததிற்குட்படுத்தப் படுகின்றன.

இதனால் விக்ருதி ஸ்வரங்கள் 5x2=10 ஸ்வரஸ்தானங்களுடன் பிரகிருதி ஸ்வரங்களான "ஸ", "ப" ஆகிய இரண்டும் சேர்ந்து 10+2=12 ஸ்வரஸ்தானங்கள் உண்டாகின்றன.

 இந்த 12 ஸ்வரஸ்தானங்கள் பின்வருவனவற்றில் விளக்குகின்றன:

1) சட்ஜம் (ஸ)
2)சுத்த ரிஷபம் (ரி1)- கோமள
3)சதுஸ்ருதி ரிஷபம் (ரி2) -தீவர
4)சாதாரண காந்தாரம் (க1) -கோமள
5)அந்தர காந்தாரம் (க2) -தீவர
6)சுத்த மத்யமம் (ம1) -கோமள
7)பிரதி மத்யமம் (ம2) -தீவர
8)பஞ்சமம் (ப) -சுத்த
9)தைவதம் (த1) -கோமள
10)சதுஸ்ருதி தைவதம் (த2) -தீவர
11)கைசிகி நிஷாதம் (நி1)
12)கோமள காகலி நிஷாதம் (நி2) -தீவர

16 ஸ்வரப் பெயர்களும் -

மேற்கண்ட 12 ஸ்வரஸ்தானங்களில் சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய ஸ்வரஸ்தானங்கள் இரட்டைப் பெயர்களுடன் விளங்குகின்ற காரணத்தால் 12+4 = 16 ஸ்வரப் பெயர்கள் உண்டாகின்றன.

 இரட்டைப் பெயர்களுடன் விளங்கும் ஸ்வரஸ்தானங்கள் - 

சதுஸ்ருதி ரிஷபம் = சுத்த காந்தாரம் - சாதாரண காந்தாரம் = ஷட்சுருதி ரிஷபம் - சதுஸ்ருதி தைவதம் = சுத்த நிஷாதம் - கைசிகி நிஷாதம் = ஷட்சுருதி தைவதம்

16 ஸ்வரப் பெயர்கள்
 சட்ஜம் (ஸ)
சுத்த ரிஷபம் (ரி1)
சதுஸ்ருதி ரிஷபம் (ரி2) = சுத்த காந்தாரம் (க1)
சாதாரண காந்தாரம் (க2)  = ஷட்சுருதி ரிஷபம் (ரி3)
அந்தர காந்தாரம் (க3)
சுத்த மத்யமம் (ம1)
பிரதி மத்யமம் (ம2)
பஞ்சமம் (ப)
சுத்த தைவதம் (த1)
 சதுஸ்ருதி தைவதம் (த2)  = சுத்த நிஷாதம் (நி1)
கைசிகி நிஷாதம் (நி2) = ஷட்சுருதி தைவதம் (த3)
காகலி நிஷாதம் (நி3)


தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்