5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1
1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள்
(உதாரணங்களுடன் ஜன்னிய ராகத்தின் பிரிவுகள் குறிப்பிடவேண்டும்)
ராகங்கள்
ராகங்கள்என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது
இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் -) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்த எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது
ஸ்வரங்கள் ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும்.
வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம்.
ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு.
எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன.
ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ரராகம் என்று அழைக்கப்படும்.
கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு.
ஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம் (sharp and flat).
நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும்.
இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும்.
பொதுவாக இருவகைப்படும்
ஏழு ஸ்வரங்களுமுடைய மூலராகம். ஜனகரகம்
1) தாய் ராகம் (ஜனக ராகம் அல்லது மேளகர்த்தா ராகம்)
2)குழந்தை ராகம் (ஜன்ய ராகம்)
கர்நாடக சங்கீதத்தில் இந்தத் தாய் ராகங்கள் மொத்தம் 72 தான்
அவற்றிலிருந்தே அனைத்துக் குழந்தை ராகங்களும் பிறக்கின்றன
மேளகர்த்தா இராகங்கள் (ஜனக இராகம்)
கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும்.
வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர்.
பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான்,
இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன,
இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது.
ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார்.
இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும்.
இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன.
72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன.
ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது.
அவையாவன:
சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம் அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை.
கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள்.
அரோகணத்தில் வரும் சுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.
ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை சுரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.
72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது.
வெங்கடமகி இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் கிரந்தத்தினின்றும் விளங்கியது.
72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சம பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றது.
மேளகர்த்தா இராகங்கள் சுத்த மத்திம இராகங்கள்
A) இந்து
1)கனகாங்கி
2)ரத்னாங்கி
3)கானமூர்த்தி
4)வனஸ்பதி
5)மானவதி
6)தானரூபி
B) நேத்ர
1)சேனாவதி
2)ஹனுமத்தோடி
3)தேனுகா
4)நாடகப்பிரியா
5)கோகிலப்பிரியா
6)ரூபவதி
C) அக்னி
1)காயகப்பிரியா
2)வகுளாபரணம்
3)மாயாமாளவகௌளை
4)சக்ரவாகம்
5)சூர்யகாந்தம்
6)ஹாடகாம்பரி
D)வேத
1)ஜங்காரத்வனி
2)நடபைரவி
3)கீரவாணி
4)கரகரப்பிரியா
5)கௌரிமனோகரி
6)வருணப்பிரியா
E)பாண
1)மாரரஞ்சனி
2)சாருகேசி
3)சரசாங்கி
4)ஹரிகாம்போஜி
5)தீரசங்கராபரணம்
6)நாகாநந்தினி
F)ருது
1)யாகப்பிரியா
2)ராகவர்த்தனி
3)காங்கேயபூஷணி
4)வாகதீச்வரி
5)சூலினி
6)சலநாட
சலநாட பிரதி மத்திம இராகங்கள்
G) ரிஷி
1)சாலகம்
2)ஜலார்ணவம்
3)ஜாலவராளி
4)நவநீதம்
5)பாவனி
6)ரகுப்பிரியா
H)வசு
1)கவாம்போதி
2)பவப்பிரியா
3)சுபபந்துவராளி
4)ஷட்விதமார்க்கிணி
5)சுவர்ணாங்கி
6)திவ்யமணி
I)பிரஹ்ம
1)தவளாம்பரி
2)நாமநாராயணி
3)காமவர்த்தனி
4)ராமப்பிரியா
5)கமனாச்ரம
6)விஷ்வம்பரி
J)திசி
1)சியாமளாங்கி.
2)சண்முகப்பிரியா
3)சிம்மேந்திரமத்திமம்
4)ஹேமவதி
5)தர்மவதி
6)நீதிமதி
K)ருத்ர
1)காந்தாமணி
2)ரிஷபப்பிரியா
3)லதாங்கி
4)வாசஸ்பதி
5)மேசகல்யாணி
6)சித்ராம்பரி
L)ஆதித்ய
1)சுசரித்ர
2)ஜோதிஸ்வரூபிணி
3)தாதுவர்த்தனி
4)நாசிகாபூஷணி
5)கோசலம்
6)ரசிகப்பிரியா
ஜன்னிய இராகங்கள்
என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர் ஜன்னிய இராகங்கள் கணக்கில் அடங்காதன.
இவற்றை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
ஜன்னிய சம்பூர்ண இராகம் (வர்ஜமற்ற இராகம்).
வர்ஜ இராகம்.
வக்ர இராகம்.
உபாங்க, பாஷாங்க இராகம்.
நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்கள்
ஜன்னிய சம்பூர்ண இராகம்
ஆரோகணமும் அவரோகணமும் சம்பூர்ணமாக உள்ள ஜன்னிய இராகம், ஜன்னிய சம்பூர்ண இராகம் ஆகும்.
உ+ம் :
பைரவி
ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
வர்ஜ இராகம்
ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும்.
அதுவே வர்ஜ இராகம் ஆகும். இவ்வாறு விலக்கப்பட்ட ஸ்வரங்களிற்கு வர்ஜ ஸ்வரங்கள் எனப்படும்.
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஒரு ஸ்வரம் வர்ஜமாக இருக்கும் போது (அதாவது ஆறு ஸ்வரங்களைக் கொண்ட ஆரோகண அவரோகணம் உள்ள இராகம்) ஷாடவ இராகம் எனப் படும்.
உ+ம் :
சிறீரஞ்சனி
ஆரோகணம் : ஸ ரி க ம த நி ஸ்
அவரோகணம் : ஸ் நி த ம க ரி ஸ
ஔடவ இராகம்
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இரு ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஔடவ இராகம் எனப்படும்.
உ+ம் :
மோகனம்
ஆரோகணம் : ஸ ரி க ப த ஸ்
அவரோகணம் : ஸ் த ப க ரி ஸ
ஸ்வராந்தர இராகம்
அபூர்வமாக மூன்று ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஸ்வராந்தர இராகம் எனப்படும்.
உ+ம் :
மகதி
ஆரோகணம் : ஸ க ப நி ஸ்
அவரோகணம் : ஸ் நி ப க ஸ
பண்டைத் தமிழிசையில் ஷாடவ இராகம் பண்டியம் என்றும், ஔடவ இராகம் திறம் என்றும் ஸ்வராந்தர இராகம் திரத்திறம் என்றும் அழைக்கப்படும். சம்பூர்ண, ஷாடவ, ஔடவ கலப்பினால் எட்டு வகையான வர்ஜ இராகங்கள் உண்டாகின்றன.
1)
ஜன்ய இராகம் - ஷாடவம்
இராகம் - சிறீரஞ்சனி
ஆரோகணம் - ஸ ரி க ம த நி ஸ்
அவரோகணம் ஸ் நி த ம க ரி ஸ்
2)
ஜன்ய இராகம் - ஔடவ ஔடவம்
இராகம் - மோகனம்
ஆரோகணம் - ஸ ரி க ப த ஸ்
அவரோகணம் ஸ் த ப க ரி ஸ
3)
ஜன்ய இராகம் - ஷாடவ ஔடவம்
இராகம் - நாட்டைக்குறிஞ்சி
ஆரோகணம் - ஸ ரி க ம த நி ஸ்
அவரோகணம் ஸ் நி த ம க ஸ
4)
ஜன்ய இராகம் - ஔடவ ஷாடவம்
இராகம் - மலஹரி
ஆரோகணம் - ஸ ரி ம ப த ஸ்
அவரோகணம் ஸ் த ப ம க ரி ஸ
5)
ஜன்ய இராகம் - ஷாடவ சம்பூர்ணம்
இராகம் - காம்போஜி
ஆரோகணம் - ஸ ரி க ம ப த ஸ்
அவரோகணம் ஸ் நி த ப ம கரிஸ
6)
ஜன்ய இராகம் - சம்பூர்ண ஷாடவம்
இராகம் - நீலாம்பரி
அவரோகணம் ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோகணம் ஸ் நி ப ம க ரி ஸ
7)
ஜன்ய இராகம் - ஔடவ சம்பூர்ணம்
இராகம் - பிலகரி
ஆரோகணம் - ஸ ரி க ப த ஸ்
அவரோகணம் ஸ் நி த ப ம க ரிஸ
ஜன்ய இராகம் - சம்பூர்ண ஔடவம்
இராகம் - சாரமதி
ஆரோகணம் - ஸ ரி க ம ப த நி ஸ்
ஸ் நி த ம க ஸ
வக்ர இராகம்
ஒரு ஜன்ய இராகத்தின் ஆரோகணத்தில் அல்லது
அவரோகணத்தில் அல்லது இரண்டிலும் சில ஸ்வரங்கள்
ஒழுங்கான வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாக
செல்லுமானால் அந்த இராகம் வக்ர இராகம் எனப்படும்.
வக்ர இராகங்கள் மூன்று வகைப்படும்.
1. ஆரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை.
உ+ம் :
ஆனந்தபைரவி
ஆரோகணம் : ஸ க ரி க ம ப த ப ஸ்
அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
2. அவரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை.
உ+ம் :
சிறீராகம்
ஆரோகணம் : ஸ ரி ம ப நி ஸ்
அவரோகணம் : ஸ் நி ப த நி ப ம ரி க ரி ஸ
3. ஆரோகணமும் அவரோகணமும் வக்ரமாக உள்ளவை. (உபய வக்ர இராகங்கள்)
உ+ம் :
ரீதிகௌளை
ஆரோகணம் : ஸ க ரி க ம நி த ம நி நி ஸ்
அவரோகணம் : ஸ் நி த ம க ம ப ம க ரி ஸ
உபாங்க இராகம் தாய் இராகத்திற்கு உரிய ஸ்வர வகைகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் இராகம் உபாங்க இராகம் எனப்படும்.
இவை வர்ஜமாகவோ அல்ல்து வக்ரமாகவோ அமையலாம்.
உ+ம் : ஹம்சத்வனி
ஆரோகணம் : ஸ ரி க ப நி ஸ்
அவரோகணம் : ஸ் நி ப க ரி ஸ
பாஷாங்க இராகம் தாய் இராகத்தைச் சேர்ந்த ஸ்வர வகைகளைத் தவிர வேறு ஸ்வரஸ்தானங்களையும் (அன்னிய ஸ்வரங்களை) எடுத்துக்கொள்ளும் இராகம் பாஷாங்க இராகம் எனப்படும்.
சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்திலேயே அன்னிய ஸ்வரம் இடம் பெறும்.
உ+ம் :
பைரவி
ஆரோகணம் : ஸ ரி க ம ப த* நி ஸ்
அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
இது 20 வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யமாகும்.
வேறு
சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண
அவரோகணத்தில் அன்னிய ஸ்வரம் இடம் பெறாமல்
சஞ்சாரத்தில் மட்டும் வரும்.
உ+ம் :
காம்போஜி பிரயோகம் :
ஸ் நி ப த ஸா பாஷாங்க இராகம் மேலும் மூன்று வகைப்படும்.
அவையாவன :
1. ஏகான்ய ஸ்வர பாஷாங்க இராகம் -
இது ஒரு ஸ்வரத்தை உடைய இராகமாகும்.
உ+ம் : முகாரி, பைரவி, காம்போஜி, பிலஹரி
2. த்வி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம் -
இது இரண்டு ஸ்வரங்களை உடைய இராகமாகும்.
உ+ம் : புன்னாகவராளி, அடாணா
3. த்ரி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம் -
இது மூன்று ஸ்வரங்களை உடைய இராகமாகும்.
உ+ம் : ஆனந்தபைரவி, ஹிந்துஸ்தான் காபி, ஹிந்துஸ்தான் பெஹாக்