5:9) 35 தாளங்களின் விபரம்

இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது தாளம் ஆகும். கர்நாடக இசையில் தற்போது ஏழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். 

"சப்தம்" என்பது வடமொழியில் எழு என்று பொருள்படும். 
 ஏழு தாளங்கள் 

துருவ தாளம் 
மட்டிய தாளம் 
ரூபக தாளம் 
ஜம்பை தாளம் 
திரிபுடை தாளம் 
அட தாளம் 
ஏக தாளம் 

தாள உறுப்புக்கள் 

தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன: 
 1. லகு 
2. அனுதிருதம் 
3. திருதம் 
4. குரு 
5. புளுதம் 
6. காகபாதம் 

லகு 
என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு பாகம் ஆகும்.
லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும்.இதன் அடையாளம் | ஆகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும்.
வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான "லகு"க்கள் உள்ளன. இவை,
  1. திஸ்ர லகு - ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் - 3 அட்சரங்கள்
  2. சதுஸ்ர லகு - ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் - 4 அட்சரங்கள்
  3. கண்ட லகு - ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் - 5 அட்சரங்கள்
  4. மிஸ்ர லகு - ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் - 7 அட்சரங்கள்
  5. சங்கீர்ண லகு - ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் - 9 அட்சரங்கள்

35 தாளங்கள் ஏழு வகைத்தாளங்களின் மூலமாகவும், ஐந்து வகையான லகுவின் வகைகள் மூலமாகவும் மொத்தமாக 35 தாளங்கள் உள்ளன. 

1)  லகுவின் ஜாதியான   திஸ்ரத்தை எடுத்துக்கொண்டால் 

திஸ்ர ஜாதி துருவ தாளம் 
திஸ்ர ஜாதி மட்டிய தாளம் 
திஸ்ர ஜாதி ரூபக தாளம் 
திஸ்ர ஜாதி ஜம்பை தாளம் 
திஸ்ர ஜாதி திரிபுடை தாளம் 
திஸ்ர ஜாதி அட தாளம் 
திஸ்ர ஜாதி ஏக தாளம் 


 2)லகுவின் ஜாதியான சதுஸ்ரத்தை எடுத்துக்கொண்டால் 

சதுஸ்ர ஜாதி துருவ தாளம் 
சதுஸ்ர ஜாதி மட்டிய தாளம் 
சதுஸ்ர ஜாதி ரூபக தாளம் 
சதுஸ்ர ஜாதி ஜம்பை தாளம் 
சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் 
சதுஸ்ர ஜாதி அட தாளம் 
சதுஸ்ர ஜாதி ஏக தாளம்

3)லகுவின் ஜாதியான கண்டத்தை எடுத்துக்கொண்டால் 

கண்ட ஜாதி துருவ தாளம் 
கண்ட ஜாதி மட்டிய தாளம் 
கண்டஜாதி ரூபக தாளம் 
கண்டஜாதி ஜம்பை தாளம் 
கண்ட ஜாதி திரிபுடை தாளம் 
கண்ட ஜாதி அட தாளம் 
கண்ட ஜாதி ஏக தாளம்

4) லகுவின் ஜாதியான  மிஸ்ரத்தை எடுத்துக்கொண்டால் 

மிஸ்ர ஜாதி துருவ தாளம் 
மிஸ்ர ஜாதி மட்டிய தாளம் 
மிஸ்ர ஜாதி ரூபக தாளம் 
மிஸ்ர ஜாதி ஜம்பை தாளம் 
மிஸ்ர ஜாதி திரிபுடை தாளம் 
மிஸ்ர ஜாதி அட தாளம் 
மிஸ்ரஜாதி ஏக தாளம்

5) லகுவின் ஜாதியான  சங்கீர்ணத்தை எடுத்துக்கொண்டால் 

சங்கீர்ண ஜாதி துருவ தாளம் 
சங்கீர்ண ஜாதி மட்டிய தாளம் 
சங்கீர்ண ஜாதி ரூபக தாளம் 
சங்கீர்ண ஜாதி ஜம்பை தாளம் 
சங்கீர்ண ஜாதி திரிபுடை தாளம் 
சங்கீர்ண ஜாதி அட தாளம் 
சங்கீர்ண ஜாதி ஏக தாளம்

ஆகிய ஏழு பேதங்களை ஒரு லகுவின் ஜாதி தருவதுப் போல ஐந்து ஜாதிகளும், ஏழு தாளவகைகளும் சேர்ந்து மொத்தமாக 35 தாளவகைகளும் உருவாகின்றன.

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்