இடுகைகள்

வாய்ப்பாட்டு வினாத்தாள்-1

எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக  பகுதி 1 1)உங்களுடைய பாடத்திட்டத்தில் உள்ள ராகங்களில் எந்த ராகம் காகலி நிஷதத்தை  அந்நியமாக கொண்டுள்ளது ? ------------------------------------------------------------------------------------ 2)புல்லாங்குழலில் எத்தனை ஸ்தாயிகள் வரை வாசிக்கமுடியும் ? -------------------------------------------------------------------------------------- 3)ஸ்வரங்களை அதன் மேல் ஸ்தாயிவரை புல்லாங்குழலில் வாசிப்பதற்கு அனுமதிக்கும் துவாரத்தின் பெயர் என்ன ? ------------------------------------------------------------------------------ 4)முத்துஸ்வாமி தீட்சகரினால் இயற்றப்பட்ட துகுதி கீர்த்தனைகளில் இரண்டின் பெயர்களை தருக்க  அ )-------------------------------------------------------- ஆ )--------------------------------------------------------- 5)கோபாலகிருஷ்ணபாரதியார் கீர்த்தனைகளை இயற்றுவதுடன் மற்றும் பல நாட்டார் இசை வகைகளையயும் இயற்றினார் அவற்றில் நான்கின் பெயர்களை தருக? அ )-------------------------------------------------------- ஆ )---------------------------------...

(6:10.4)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .4

ஆபோகி   கர்நாடக இசையில் உள்ள ராகத்தில் ஆபோகி ஒரு ராகம் ஆகும்  இது மேளகர்த்தா ராகத்தில் 22 வது ராகமாகும்  இதனை வேத எனப்படும் இது 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய ராகமாகும்   இதன்   ஆரோகணம் ஸ ரி2 க2 ம1 த2 ஸ்  அவரோகணம் - ஸ் த2 ம1 க2 ரி2 ஸ   இந்த ராகத்தில் ஷட்ஜம் ,சதுஸ்ருதி ரிஷபம் (ரி 2) சாதாரண காந்தாரம் (க2 ) சுத்த மத்திமம் (ம 1) சதுஸ்ருதி தைவதம் (த 2) ஆகிய சுரங்கள் வருகின்றன  ப , நி ஆகிய ராகங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ ராகம் ஆகும்  அத்துடன் இது ஔடவ ராகம் , உபாங்க ராகம் ஆகும் .   இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். இது திரிஸ்தாயி இராகம் ஆகும்.  மேலும் எப்போதும் பாடக் கூடியது.   நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம். கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம். தியாகராஜ சுவாமிகளால் பிரசித்திக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று.  மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் மத்திம மூர்ச்சனையே வலஜி இராகம்  ஆகும்.   கருணைச் சுவை கொண்ட இராகம்.

(6:10.3)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .3

கரஹரபிரியா கர்நாடக இசையில் மேளகர்த்தா ராகங்கள் 72. அவற்றில் 22-வது ராகமான கரஹரபிரியா கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர். ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ் அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2),  சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.  சிறப்பு அம்சங்கள் பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும். கருணைச் சுவையைக் கொண்டது. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். எப்போதும் பாடலாம். இவ்விராகமே பழமையான சாமகானத்தை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு நேர் பிரதி மத்திம இராகம்  ஹேமவதி (58). இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, க, ம, ப, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, தீ...

(6:10.2)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .2

கமாஸ்  இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]: ஆரோகணம்: ச ம1 க3 ம1 ப த2 நி2ச அவரோகணம்: ச நி2த2 ப ம1 க3 ரி2 ச இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.   உருப்படிகள் வகை                        உருப்படி இயற்றியவர்         தாளம்     கிருதி  ப்ரோசே வாரெவருரா மைசூர்        வாசுதேவாச்சாரியார்    ...

(6:10.1)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .1

ஆரபி இராகம்  கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும்  ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.  பண்டைய தமிழிசைப் பண்களில் பழந்தக்கராகம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆரபி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம் ஆரபி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்  இந்த இராகத்தில்  சட்சம் (ச),  சதுச்ருதி ரிசபம் (ரி2),  சுத்த மத்திமம் (ம1),  பஞ்சமம் (ப),  சதுச்ருதி தைவதம் (த2),  காகலி நிசாதம் (நி3),  அந்தர காந்தாரம் (க3)  ஆகிய சுரங்கள் வருகின்றன.  இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:   ஆரோகணம்: ச ரி2 ம1 ப த2 ச்  அவரோகணம்: ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச  இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.  இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம்  எனப்படும் 

(6:9:2)பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்

பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்  கோபாலகிருஷ்ணபாரதி    தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள முடிகொண்டான் கிராமத்தில் ராமசாமியாருடைய காலத்தில் 1810 ஆம் ஆண்டு இராமசாமி பாரதிக்குப் புதல்வராக அவதரித்தார். இவர் அந்தண வருணத்தில் வடமா வகுப்பினர். இவருடைய முன்னோர்கள் சங்கீதப் பயிற்சி உடையவர்கள். நைஷ்டிக பிரம்மச்சாரியாகிய கோவிந்த ஜதி என்பவரிடம் யோகம் முதலியனவைகளைப் பயின்று ஆனந்த தாண்டவபுரம் என்னும் ஊருக்கு வந்து அங்கு மிராசுதாரராக இருந்த அண்ண ஐயர் என்பவரால் ஆதரிக்கப்பட்டு வந்தார். அங்கு காலட்சேபம் செய்து பணம் சம்பாதித்தார். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இருந்து 37 செய்யுள்கள் அடங்கிய நந்தனார் சரித்திரத்தை இவர் ஒரு பெரிய கதையாகச் செய்து 'நந்தனார் கீர்த்தனைகள் ' எனும் ஒரு இசை நாடகத்தையும் எழுதினார். இவர் இந்த சரித்திரத்தில் பல பாத்திரங்களைப் புகுத்தி அழகிய கீர்த்தனைகளாக அமைத்தார். அதன் மூலம் இந்த கதைகள் சங்கீத உலகம் வாசிப்பதற்கு பெறுமதியாக அளித்தார். இந்த இசை நாடகத்தில் பல அழகிய கீர்த்தனைகளும், பல இரு சொல் அலங்காரம், நொண்ட...