(6:10.4)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .4
ஆபோகி
கர்நாடக இசையில் உள்ள ராகத்தில் ஆபோகி ஒரு ராகம் ஆகும்
இது மேளகர்த்தா ராகத்தில் 22 வது ராகமாகும் இதனை வேத எனப்படும் இது 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய ராகமாகும்
இதன்
ஆரோகணம் ஸ ரி2 க2 ம1 த2 ஸ்
அவரோகணம் - ஸ் த2 ம1 க2 ரி2 ஸ
இந்த ராகத்தில் ஷட்ஜம் ,சதுஸ்ருதி ரிஷபம் (ரி 2) சாதாரண காந்தாரம் (க2 ) சுத்த மத்திமம் (ம 1) சதுஸ்ருதி தைவதம் (த 2) ஆகிய சுரங்கள் வருகின்றன
ப , நி ஆகிய ராகங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ ராகம் ஆகும்
அத்துடன் இது ஔடவ ராகம் , உபாங்க ராகம் ஆகும் .
இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
இது திரிஸ்தாயி இராகம் ஆகும்.
மேலும் எப்போதும் பாடக் கூடியது.
நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம்.
கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம்.
தியாகராஜ சுவாமிகளால் பிரசித்திக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று.
மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் மத்திம மூர்ச்சனையே வலஜி இராகம்
ஆகும்.
கருணைச் சுவை கொண்ட இராகம்.