(6:10.3)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .3

கரஹரபிரியா


கர்நாடக இசையில் மேளகர்த்தா ராகங்கள் 72. அவற்றில் 22-வது ராகமான கரஹரபிரியா

கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர்.

ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்

அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ

வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
இந்த இராகத்தில்
ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2),
 சாதாரண காந்தாரம்(க2),
சுத்த மத்திமம்(ம1),
பஞ்சமம்,
சதுஸ்ருதி தைவதம்(த2),
கைசிகி நிஷாதம் (நி2)

ஆகிய சுரங்கள் வருகின்றன.

 சிறப்பு அம்சங்கள்

பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும். கருணைச் சுவையைக் கொண்டது. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். எப்போதும் பாடலாம். இவ்விராகமே பழமையான சாமகானத்தை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு நேர் பிரதி மத்திம இராகம்

 ஹேமவதி (58).
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, க, ம, ப, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, தீரசங்கராபரணம் ஆகிய மேளங்களைக் கொடுக்கும். தியாகராஜர் இந்த இராகத்தில் பல கிருதிகளை இயற்றியுள்ளார்.

உருப்படிகள்

கிருதி : சக்கனிராஜ : ஆதி :
தியாகராஜர் கிருதி : பக்கல நிலபடி : மிஸ்ர சாபு : 
தியாகராஜர். கிருதி : என்ன செய்தாலும் : ஆதி : 
பாபநாசம் சிவன் கிருதி : கண் பாரய்யா : ஆதி :

கோடீஸ்வர ஐயர் கிருதி : மாயவித்தை செய்வோனே : ஆதி : 

முத்துத் தாண்டவர் ஜன்ய இராகங்கள் கரகரப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. 

 ஆபேரி 
ஆபோகி 
உசேனி 
உதயரவிச்சந்திரிக்கா 
களாநிதி 
கன்னடகௌளை 
காப்பி கானடா 
கிரணாவளி 
சிறீராகம் 
சிறீரஞ்சனி 
சிவரஞ்சனி 
சுத்தபங்காளா 
தர்பார் 
நாகவல்லி 
நாயகி
 நாஹரி 
மகுடதாரிணி 
மத்தியமாவதி 
மயூரத்வனி 
மத்திமராவளி 
மணிரங்கு 
முகாரி 
தேவமனோகரி 
ஜெயமனோகரி 
ரீதிகௌளை 
பாலச்சந்திரிக்கா 
பிருந்தாவனசாரங்கா 
புஷ்பதிலகா 
பூர்ணகளாநிதி 
மஞ்சரி 
ஜெயநாராயணி 
ஸ்வரபூஷணி 
சித்தசேனா 
மனோகரி 
மாளவசிறீ 
ஜெயந்தசேனா 
பலமஞ்சரி 
தேவகிரியா 
லலிதமனோகரி
 ருத்ரப்பிரியா 
இனகரப்பிரியா
 ஓம்காரி
 வரமு 
போகவதி

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்