(2 - 4)தாளத்தின் அங்கங்களும் குறியீடுகளும்

தாளம்

 இசையின் ஓசைக்கு ஏற்றபடி தட்டு அல்லது வீச்சு
(காற்றில் வீசுவது ) அல்லது விரல் விட்டு எண்ணுவதே ஆகும்.

தாளஅங்கங்கள்

1)லகு
2)த்ருதம் 
3)அனுத்ருதம்
4)குரு 
5)ப்லுதம்
6)காக பாதம் 

என்று 6 அங்கங்களைக் கொண்டது தாளம். இருப்பினும் முதல் மூன்று அங்கங்கள் மட்டும் இப்பொழுது வழக்கத்தில் உள்ளன.

லகு:

 தட்டி எண்ணுவதற்கு “லகு” என்று பெயர். அதன் அடையாளம் = 1

த்ருதம்: 

தட்டித் திருப்புவதற்கு த்ருதம் என்று பெயர். அதன் அடையாளம் = ௦ 

அனுத்ருதம். 

ஒரு அக்ஷர காலமளவுக்கு தட்டுவதற்கு அனுத்ருதம் என்று பெயர். அதன் அடையாளம் = U.

தாளங்கள் ஏழு வகைப்படும


ஸப்ததாளங்கள்
அங்கங்கள்


த்ருவ தாளம் -                                                           1 ௦ 1 1
மட்ய தாளம                                                              1 ௦ 1
ரூபக தாளம்                                                              ௦ 1
ஜம்ப தாளம்
          1 U ௦
த்ருபுட தாளம்                                                           1 ௦ ௦
அட தாளம்                                                                  1 1 ௦ ௦
ஏக தாளம்                                                                   1

லகுவின் ஜாதி ஐந்து வகைப்படும்


திச்’ர ஜாதி (லகு)                அக்ஷரம்3   சதுச்’ர ஜாதி (லகு)                அக்ஷரம்4
கண்ட ஜாதி (லகு)           அக்ஷரம் 5
மிச்’ர ஜாதி (லகு)              அக்ஷரம் 7
ஸங்கீரண் ஜாதி (லகு)    அக்ஷரம் 9


த்ருதம்                                அக்ஷரம் 2
அனுத்ருதம்                       அக்ஷரம் 1

ஜாதி என்பது லகுவின் அக்ஷர எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த ஏழு தாளங்களும் ஒவ்வொரு தாளத்திற்கு 5 பேதங்கள் வீதம் 35 விதமான தாளங்களை தோற்றுவிக்கிறது.

இதை பஞ்ச ஜாதி பேதம் என்று கூறுவர்.

உதாரணத்திற்கு த்ருவ தாளத்தையும் அதன் 5 விதமான தாளங்களையும், அக்ஷரகால அளவையும் அதற்குரிய குறியுடன் கீழே அளிக்கப் படுகிறது.


திச்’ர - 13 02 13 13                   11 அக்ஷரங்கள்
சதுச்’ர - 14 02 14 14 14          14 அக்ஷரங்கள்
கண்ட - 15 02 15 15                  17 அக்ஷரங்கள்
மிச்’ர - 17 02 17 17                    23 அக்ஷரங்கள்
ஸங்கீரண் - 19 02 19 19        29 அக்ஷரங்கள்

அதிகளவில் அக்ஷர காலத்தைக் கொண்ட தீர்க்கமான தாளம் ஸங்கீரண த்ருவ தாளம். 

த்ருவ தாளத்திற்கு 1 லகு, த்ருதம், லகு, லகு (1 ௦ 1 1)
ஸ்ங்கீர்ண ஜாதி த்ருவ தாளத்தின் அக்ஷரங்கள் - 9, 2, 9, 9
மொத்தம் = 29 அக்ஷரங்கள்

குறைந்த அளவில் அக்ஷர காலத்தைக் கொண்டு குறைந்த அளவான தாளம் திச்’ர ஜாதி ஏக தாளம்.1. லகுவை (1) மட்டுமே கொண்டது 

ஏக தாளம். திச்’ர ஜாதி என்றால் ஒரு தட்டு இரண்டு எண்ணுவது. ஆகவே திச்’ர ஏக தாளத்திற்கு அக்ஷரங்கள் 3.

குறிப்பு:

ஸ்வரத்தின் அருகில் , வந்தால் இரண்டு அக்ஷர காலம்
அதாவது ,


ஸ    ---> ஒரு அக்ஷர காலம்
ஸ,---> இரண்டு அக்ஷர காலம்
ஸ,,---> மூன்று அக்ஷர காலம்
ஸ,,,---> நான்கு அக்ஷர காலம்

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்