5:9) 35 தாளங்களின் விபரம்
இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது தாளம் ஆகும். கர்நாடக இசையில் தற்போது ஏழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். "சப்தம்" என்பது வடமொழியில் எழு என்று பொருள்படும். ஏழு தாளங்கள் துருவ தாளம் மட்டிய தாளம் ரூபக தாளம் ஜம்பை தாளம் திரிபுடை தாளம் அட தாளம் ஏக தாளம் தாள உறுப்புக்கள் தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன: 1. லகு 2. அனுதிருதம் 3. திருதம் 4. குரு 5. புளுதம் 6. காகபாதம் லகு என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு பாகம் ஆகும். லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும்.இதன் அடையாளம் | ஆகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம க...
