(3-2:1)ஜதிஸ்வரம் -1

 ஜதிஸ்வரம்: 


ஜதீஸ்வரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும்.

விருத்தங்களால் ஆனது ஜதிஸ்வரம். ஒரு ஜதிஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் அதில்பல கோர்வைகள் இருக்கும். ஜதிஸ்வரத்தில் வரும் முதல் கோர்வைக்கு தீர்மானம்என்று பெயர். கோர்வைகள் எனப்படுவது ஸ்வர வரிசைகளை உருவாக்குவது. பலஅடவுகள் சேர்ந்ததுதான் கோர்வை. ஒவ்வொரு கோர்வையும், மை அடவினால் ஆனதாக இருக்கும். ஜதிஸ்வரத்தில்வெறும் நடனம் மட்டுமே இருக்கும். அபிநயம் இருக்காது. 



இராகமாலிகையாக அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு. சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த ஜதீஸ்வரங்களும் உள்ளன. நாட்டிய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின்பு ஜதீஸ்வரம் ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும். ஜதீசுவரம் இயற்றியோர் சுவாதித் திருநாள் மகாராஜா பொன்னையாப் பிள்ளை



அலாரிப்பிற்கு அடுத்த நிகழ்ச்சி ஜதீஸ்வரமாகும். இது ஸ்வரங்களையும், ஜதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது பல்லவி, அனுபல்லவி,சரணம் என்ற பகுதிகளை உடையது. ஜதீஸ்வரத்தில் முதல் ஸ்வரப் பகுதியை எடுத்துப்பாடியதும் மேற்காலத்தில் ஒரு ஜதியுடன் நிகழ்ச்சி தொடங்குகின்றது. இவ்வுருப்படியை மேலும் மெருகூட்டுவதற்காக ஒருசில மெய்யடைவுகளை ஜதீஸ்வரத்தின் ஆரம்பத்திலும் சில கோர்வைகளின் இறுதியிலும் செய்கின்றார்கள். ஜதீஸ்வரத்தில் ஸ்வரங்களுக்கு ஏற்றவாறு கோர்வை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்லவிக்கு பல அடவு கோர்வைகள் அமைக்கப்பட்டிருக்கும். கோர்வைகள் யாவும் தாளக்கதியாலும், அடவுகளினாலும் வேறுபட்டிருக்கும். பல்லவியை அடுத்து அனுபல்லவி காணப்படும். இதற்க்கு மேற்க்காலத்தில் கோர்வைகள் அமைக்கப்பட்டிருக்கும். அனுபல்லவியை அடுத்து சரணங்கள் காணப்படும். ஜதீஸ்வரத்தில் ஆரம்பத்திலும், மத்தியிலும், இறுதியிலும் மெய்யடவு ஆடப்படுகிறது. ஜதீஸ்வரம் பல ராகங்களிலும், தாளங்களிலும் கையாளப்பட்டுவருகின்றது. இவ்வுருப்படி அநேகமாக ஆதி தாளத்திலும், ரூபக தாளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வரங்களுக்கு ஏற்றவாறு அடவுகளைத் தெரிவுசெய்து ஆடினால் எடுப்பாக இருக்கும். இது ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்குரிய உருப்படியாக அமைந்துள்ளது. ஜதீஸ்வரத்தை ஸ்வரப்பல்லவி என்றும் அழைப்பதுண்டு.

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்