வாய்ப்பாட்டு வினாத்தாள்-1

பகுதி 1

எல்லா வினாக்களுக்கும் விடை தருக

1) 7ஸ்வரங்களுக்குரிய வேறு பெயர் என்ன ?

2)பிரக்கிருதி ஸ்வரங்களின் பெயர்களை கூறுக ?

3)ஆறாவது ஸ்வரத்தின்  பெயர் என்ன  ? 

4)முதல்  இரண்டு விக்ருதி ஸ்வரங்களின் பெயர்களை கூறுக ?

5)கர்நாடக இசையில் ஸ்வரங்களின் ஏறும் இறங்கும் நிரைகளுக்கு தரப்பட்டுள்ள மறு பெயர் என்ன ?

6)மத்திம ஸ்தாயிக்கு  அடுத்ததாக வரும் ஸ்தாயின் பெயர் என்ன ? ´


 பகுதி 2

1)சப்த தாளங்களில்  ஜந்தாவது தாளத்தின் பெயர் என்ன?

2) I 7 U O என்பவை  எந்த தாளத்தின் அங்கங்கள் ?

3)ஸ் நி த  நி / ஸ நி  / ஸ நி த ப // என்ற வரி எந்த அங்கத்தில் வருகிறது ?

4)14 அட்ஷரங்களையுடைய தாளங்களை எழுதுக ?

5)கண்ட மிஸ்ர சங்கிர்ண ஜதி  லகுக்களது  குறியியிடுகளை எழுதுக ?


பகுதி 3

1) மாயாமாளவகௌளை ராகத்தின் ஆரோகண அவரோகணங்களை  அவற்றின் ஸ்வரக்குறியீடுகளுடன்  எழுதுக ?

2)ஸரிமபதஸ - ஸதபமரிஸ  என்பது எந்த ராகத்தினது ஆரோகண அவரோகணம் ?

3)மலகரி ராகத்தின் ஆரோகண அவரோகணங்கள் எவை ?

4)மலகரி ,மோகனம் என்பவற்றின் ஆரோகணங்கள் எவ்விதத்தில் ஒன்றுபடுகின்றன ? 



பகுதி 4

1)ஸா , ; - என்பது எத்தனை அட்சர காலங்களைக்  குறிக்கிறது ?

2)ஸரிகம பமகரி  ஸரிகம பதநிஸ - என்பது எத்தனையாவது காலத்தை குறிக்கிறது ?

3)வீணையை தன்னுடைய   கையில் வைத்திருக்கும் தெய்வத்தின் பெயர் என்ன ?

4)கர்நாடக இசையின் ஆரம்ப ஸ்வர வரிசைகளை இயற்றியவர் யார் 


தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்