3:9அலாரிப்பு -1
அலாரிப்பு
பரத நாட்டிய நிகழ்ச்சியின் முதல் நடனம் அலாரிப்பு. கடவுள், குரு சபையோர் முதலானோரை ஆடுபவர் மதித்து வணங்கும் நிகழ்ச்சி. நிருத்த வகையான ஆடல் இது. அடவுகள் இந்த ஆடலில் முதன்மை பெறும். அடவுகளுக்கான சொற்கட்டுகள்,
"தத்தை தையும் தத்தாம் கிடதக" என்றவாறு அமையும்.
திச்ரம் (மூன்று) கண்டம் (ஐந்து), மிச்ரம்(ஏழு) ஆகிய தாள வகைகள் அலாரிப்பில் இடம் பெறும்.
அடவுச் சொற்கட்டுகளை நட்டுவனார் தத்தகாரத்தில் சொல்வார்.
பக்க இசையாளர் கம்பீர நாட்டை இராகத்தில் கோவையாக இசைப்பார். அடவுக் கோவைகள் முதற் காலம், இரண்டாம் காலம் என்று ஆடித் தீர்மானத்துடன் முடியும். இதை ஒரு எடுத்துக்காட்டினால் தெரிந்து கொள்ளலாம். இதோ!