வாய்ப்பாட்டு வினாத்தாள்-4
பகுதி 1
கீழே தரப்பட்டுள்ள வினாவை வாசித்து சரியான விடையினை தரப்பட்டுள்ள கோட்டில் எழுதுக
1)
ஸ்ரலி வரிசைகள் (ஆரம்ப வரிசைகள்) தொடங்கும் ராகம் எது ?
அ )சங்கராபரணம்
ஆ )மோகனம்
இ )மாயாமாளவகௌளை
ஈ )கல்யாணி
--------------------------------------------------
2)
ஒரு ராகத்தின் ஆரோகணம் கீழ் வரும் என்ன பெயரால் அழைக்கப்படும் ?
அ )பூர்வாங்கம்
ஆ )ஏறுநிரை
இ )இறங்குநிரை
ஈ )உத்தராங்கம்
--------------------------------------------------------
3)
சுருதியை மாதாவிற்கு ஒப்பிட்டால் லயம் என்பது ?
அ )தாளம்
ஆ )பிதா
இ )சங்கீதம்
ஈ )தாய்
--------------------------------------------
4)
பிரக்ருதி ஸ்வரங்கள் என்பவை ----------------
அ )ம , த
ஆ) த , நி
இ) ஸ , ப
ஈ) ரி , க
5)
விக்ருதி ஸ்வரங்கள் கீழ்த்தரப்பட்டுள்ள வேறுபாடுகள் உடையவை ?
அ)ஜதி வேறுபாடுகள்
ஆ)கோமள - தீவிர
இ )ஆரோகண - அவரோகணம்
ஈ )சட்ஜம் - பஞ்சமம்
----------------------------------------------------------
( 5 x 5= 25 புள்ளிகள் )
பகுதி 2
பின்வரும் வினாக்களுக்கு மிக சுருக்கமான விடை தருக
அ)சப்த தாளங்களில் அதிகமான லகுக்களையுடைய தாளம் எது ?
---------------------------------------------------------------------------------------------------
ஆ)ஆவர்த்தன முடிவு அல்லது முழுமையான ஓர் ஆவர்த்தனத்தை குறிப்பிடும் குறியீடு எது ?
-------------------------------------------------------------------------------------------------
இ )ஜதிபேதம் மூலம் மாறுபாடுடையம் சப்ததாளத்தின் ஓர் அங்கம் எது ?
---------------------------------------------------------------------------------------------------
ஈ )ஸ் ரீ ,;;;, என்பவை எத்தனை அட்சரங்கள் ?
-------------------------------------------------------------------------
ஈ )ஒரு நெடில் ஸ்வரம் எத்தனை அட்ஷரங்களுக்கு சமமானது ?
---------------------------------------------------------------------------------------------
(5X 5=25புள்ளிகள் )
பகுதி 3
சரியான விடையின் கீழ் கோடிடுக
1)சங்கராபரணத்தின் ஸ்வரங்கள் எவை ?
அ )சுத்தத்தைவதம் சுத்தநிஷாதம்
ஆ )சதுஸ்ருதிதைவதம் கைசிகிநிஷாதம்
இ )சதுஸ்ருதிதைவதம் காகலிநிஷாதம்
2)மாயமாளகௌளை ராகத்தின் தொடர் இலக்கம் என்ன ?
அ )36
ஆ )15
இ )18
3)மலகரி இராகத்தின் ஆரோகண அவரோகணம் என்ன ?
அ) ஸ ரி க ப த ஸ் ஸ் த ப க ரி ஸ
ஆ) ஸ ரி ம ப த ஸ் ஸ் த ப க ரி ஸ
இ) ஸ ரி ம ப த ஸ் ஸ் த ப ம க ரி ஸ
4)ஆரோகண அவரோகணத்தில் ஜந்து ஸ்வரங்களுடைய ராகம் எது ?
அ ) மலகரி
ஆ )கல்யாணி
இ )மோகனம்
5)கல்யாணி இரக்கத்தின் உண்மையான பெயர் என்ன ?
அ )மேசகல்யாணி
ஆ )சுத்தகல்யாணி
இ )மோகனகல்யாணி
(5X 5= 25 புள்ளிகள்)
பகுதி 4
சதுஸ்ரஜதி மட்யதாள அல்லது திஸ்ரஜதி திரிபுடைதாள அலங்காரத்தை அதன் ஸ்வர தாள அங்க அடையாளங்களுடன் கீழே தரப்பட்ட இடங்களில் எழுதுக
ராகம் - மாயாமாளவகௌளை தாளம் ----------------------
------------------------------ ---------------------------------------- ----------------------------------
------------------------------ ---------------------------------------- -----------------------------------
-------------------------------- --------------------------------------------- ---------------------------------