4:10)கீதத்தின் லக்ஷணம்

கீதத்தின் லக்ஷணம்

கீதம் என்பது இசை சாகித்தியம் இரண்டினதும் சேர்க்கை  எனக்  கருதப்படுகிறது .இது இசை உருப்படிகளுள்  மிகவும் எளிதானது .இது அப்பியாச வரிசைகளில் ஒன்று . அப்பியாச வரிசைகளை  அடுத்து சாகித்திய ரூபமாக அமைந்த முதல் உருப்படி இதுவாகும் . எளிய வர்ண மெட்டில்இது அமைந்திருக்கும்  இதற்கு பல்லவி ,அனுபல்லவி, சரணம்  என்ற  அங்க வித்தியாசங்கள் இல்லை .சங்கதிகள் . கடினமான வக்ர பிரயோகங்கள்  இதில் காணப்படாது .தாதுக்கள் இலகுவான நடையில்  அமைந்திருக்கும் .ஆஇய ,திஇய,வஇய  போன்ற அர்த்தமற்ற சொற்கள் கீதங்களில் காணப்படும் .இவை மாத்ருகாபதம் அல்லதுகீதாலங்காரச்  சொல்  எனப்படும்  .தமிழிலும் , தெலுங்கிலும் , வடமொழியிலும் ப கீதங்கள் இயற்றப்பட்டுள்ளன கீதம் ஆரம்பம் முதல்  முடிவு வரை தொடர்ச்சியாகப் பாட வேண்டும் இதில் சங்கதிகள் கிடையாது , ஒவ்வொரு ஸ்வரத்திற்கும்  சாகித்தியத்தில் ஒரு எழுத்துத் தான் இருக்கும் .
 உதாரணம்  ஸரி / காமா // 
                        கண / நாதா //

கீதம் இரண்டு  வகைப்படும் 
1)சஞ்சாரி கீதம்  அல்லது  சாமான்ய கீதம் 


2)இலட்சண கீதம் 

1)சஞ்சாரி கீதம்  அல்லது  சாமான்ய கீதம் 

இது சாதாரண கீதம் ,இலட்சிய கீதம்  இன்ற பெயரில் அமைந்திருக்கும்  இதன் சாகித்தியம் தெய்வ துதியாகவோ  அல்லது அரசர்களை புகழ்ந்து பாடுவதாகவோ இருக்கும் .
உதாரணம் 
 1)கணநாதா - மாயாமாளவகௌளை 
2)ஸ்ரீகணநாதா - மலஹரி 
3)வரவீனா - மோகனம் 

இயற்றியோர் 
2) புரந்தரதாசர் 
3)பைடால குருமூர்த்திசாஸ்த்திரி 

2)இலட்சண கீதம் 

இதன் சுஸ்கித்தியம் கீதம் எந்த ராகத்தில் அமைந்துள்ளதோ அந்த ராகத்தில் லட்ஷணத்தை சாகித்தியத்தில் கொண்டிருக்கும் அதாவது அதன் ராகம் ,ஆரோகண அவரோகணம் ,ஸ்வரத்தானம் , தாய் ராகம் ,வர்ஜ ஸ்வரம் போன்ற விபரங்களைக் கொண்டு இருக்கும் ,இந்த   லட்ஷண கீதத்தின் உதவியை கொண்டு அநேக ஸ்வரங்கலின்  சரித்திரங்களை அறியலாம் 
உதாரணம்  முகாரி ராகம்  -முகாரி .ஆதி 
ஹரிகாம்போதி  . சுத்தசாவேரி - கண்டசார்பு 

இயற்றியோர் 
1)பைடால குருமூர்த்தி சாஸ்திரி 
2)வேங்கடமகி  
3)க.பொன்னையாப்பிள்ளை 

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்