4:2:2கீர்த்தனம்(ஆதி தாளம் ) -02

ராகம்: மாயாமாளவ கௌளை 
 தாளம்: ஆதி 

 பல்லவி

 ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ


 அனுபல்லவி

 நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர் 

 சரணம் 1

 பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப் பொங்குமுடனே உரித்து சரித்த புலித்தோல் அசைந்தாட
 செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை கண் முயலகனாட கங்கை இளம்பிறை செஞ்சடையாடக் கனக சபைதனிலே 

 சரணம் 2

 ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவும் படம் விரித்தாட
 சீரணி கொன்றை மலர்த்தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட 
 பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் 
 பூஜித்துக்கொண்டு நின்றாடக் கனக சபைதனிலே 

 சரணம் 3

 நிர்த்த கணபதி வேலர் நின்றாட நின்றயன் மாலொடு இந்திரன் ஆட முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட 
 மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்