4:3:2கீர்த்தனம்( ரூபக தாளம்) - 02

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா 

ராகம்:- ஆபோஹி 
தாளம்:-ரூபகம் 

 பல்லவி 
 சபாபதிக்கு வேறு தெய்வம் 
சமானமாகுமா 
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் 
சமானமாகுமா( சபாபதிக்கு) 

 அனுபல்லவி 

 கிருபாநிதி இவரைப்போல 
கிடைக்குமோ 
இந்த தரணி தன்னில் (சபாபதிக்கு..) 

 சரணம் 

 ஒருதரம் சிவசிதம்பரம் என்றால்
 சொன்னால் போதுமே 
பரகதிக்குயடைய வேறே புண்ணியம் 
செய்யவேண்டாமே 
அரிய புலையர் மூவர் பதம் அடைந்தார்
 என்றே புராணம் சொல்லக்கேட்டோம் 
கோபலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்