4:6)ராகங்கள்

ராகங்கள்

ராகங்கள்என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது 

 இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் -) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்த  எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது 

ஸ்வரங்கள் ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். 

வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். 

ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. 

எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. 

ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ரராகம் என்று அழைக்கப்படும். 

கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு. 

 ஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம் (sharp and flat).

நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும். 

இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும்.

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்