4:6:1)மேளகர்த்தா இராகங்கள் (ஜனக இராகங்கள்)

ராகம்   

பொதுவாக  இருவகைப்படும்

ஏழு ஸ்வரங்களுமுடைய மூலராகம். ஜனகரகம்

1) தாய் ராகம் (ஜனக ராகம் அல்லது மேளகர்த்தா ராகம்)
2)குழந்தை ராகம் (ஜன்ய ராகம்)

 கர்நாடக சங்கீதத்தில் இந்தத் தாய் ராகங்கள் மொத்தம் 72 தான்

 அவற்றிலிருந்தே அனைத்துக் குழந்தை ராகங்களும் பிறக்கின்றன

மேளகர்த்தா இராகங்கள் (ஜனக இராகம்)

கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். 

வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.

 இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். 

பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், 

இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன,

 இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது.

ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். 

இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். 

இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 

72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன.

 ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது.

 அவையாவன: 

 சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம் அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை. 

கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள். 

அரோகணத்தில் வரும் சுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல். 

ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல். 

மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை சுரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.


72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. 

வெங்கடமகி இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் கிரந்தத்தினின்றும் விளங்கியது. 

72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சம பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 

72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றது.

மேளகர்த்தா இராகங்கள் சுத்த மத்திம இராகங்கள்

 A) இந்து  
            1)கனகாங்கி 
            2)ரத்னாங்கி
            3)கானமூர்த்தி
           4)வனஸ்பதி
           5)மானவதி 
           6)தானரூபி 

B) நேத்ர  
          1)சேனாவதி
          2)ஹனுமத்தோடி
          3)தேனுகா 
          4)நாடகப்பிரியா 
          5)கோகிலப்பிரியா
          6)ரூபவதி 

C) அக்னி  
         1)காயகப்பிரியா
         2)வகுளாபரணம்
         3)மாயாமாளவகௌளை 
         4)சக்ரவாகம்
         5)சூர்யகாந்தம்
         6)ஹாடகாம்பரி 

D)வேத 
        1)ஜங்காரத்வனி
        2)நடபைரவி
        3)கீரவாணி
       4)கரகரப்பிரியா
      5)கௌரிமனோகரி 
      6)வருணப்பிரியா 

E)பாண 
       1)மாரரஞ்சனி 
       2)சாருகேசி
       3)சரசாங்கி
       4)ஹரிகாம்போஜி
       5)தீரசங்கராபரணம் 
       6)நாகாநந்தினி 

F)ருது 
        1)யாகப்பிரியா
        2)ராகவர்த்தனி
        3)காங்கேயபூஷணி 
        4)வாகதீச்வரி 
        5)சூலினி
        6)சலநாட

சலநாட பிரதி மத்திம இராகங்கள்

 G) ரிஷி 
         1)சாலகம் 
         2)ஜலார்ணவம்
         3)ஜாலவராளி
         4)நவநீதம்
         5)பாவனி
         6)ரகுப்பிரியா 

H)வசு 
        1)கவாம்போதி
        2)பவப்பிரியா
        3)சுபபந்துவராளி 
        4)ஷட்விதமார்க்கிணி
        5)சுவர்ணாங்கி
        6)திவ்யமணி 

I)பிரஹ்ம  
       1)தவளாம்பரி
       2)நாமநாராயணி 
       3)காமவர்த்தனி
       4)ராமப்பிரியா
       5)கமனாச்ரம
      6)விஷ்வம்பரி 

J)திசி  
       1)சியாமளாங்கி. 
       2)சண்முகப்பிரியா
       3)சிம்மேந்திரமத்திமம்
       4)ஹேமவதி
       5)தர்மவதி 
       6)நீதிமதி 

K)ருத்ர 
     1)காந்தாமணி
     2)ரிஷபப்பிரியா
     3)லதாங்கி
    4)வாசஸ்பதி 
    5)மேசகல்யாணி
    6)சித்ராம்பரி 

L)ஆதித்ய 
         1)சுசரித்ர
         2)ஜோதிஸ்வரூபிணி
         3)தாதுவர்த்தனி
         4)நாசிகாபூஷணி
         5)கோசலம்
         6)ரசிகப்பிரியா

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்