4:3)சப்தம் -2

பாடல்                               சீனமார் கோவில் சண்முகம் 
பாடல் இசை                 துரையூர் இராஜகோபாலசர்மா 
நடன அமைப்பு           கலாநிதி வி பி தனஞ்செயன் 


இராகம்    இராகமாலிகை                                        தாளம்     மிஸ்ரசார்பு 


1)காம்போதி 

  தண்டை முழங்க சதங்கை கிலுங்க 
  தவழ்ந்து வரும் முருகா 
  தமிழ் தாலாட்டு பாட்டில் 
  குழந்தையாய் என்முன் தாவி வரும் முருகா 


2)சிம்மேந்திர மந்திரம் 

  சிறுகை முன் நீட்டி குறுநடை  நடந்து 
  சிந்தை மகிழ் குமரா - ஒரு 
  தேனுரும் சொல்லாலே  வாயமலர்ந்து நீயும் 
  சிரித்து வரும் முருகா  

3)ஹிந்தோளம் 

   மாந்தளிர் மேனி  நிறத்தழகும் 
   கருமை கொண்ட புருவமும்  - செஞ் 
   சாந்திட்ட  திலகமும் சந்தன மனங் கமழ் 
   சங்கரன் மகனே வா 

4)காபி 

  நீலமயில்  மேல் வேலுடன் அமர்ந்து 
  நீ  வரும் காட்சி என்றோ (முருகா) - எந்தன் 
  நெஞ்சம் மகிழவே  தஞ்சம்  அளித்து 
  நேசிக்கும் காட்சி ஏன்றோ 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்