4:5)சிரோ திருஷ்டி க்ரிவாபேதங்கள் -1

சீரோ பேதம் (தலையின் அசைவு )

அறிமுறை 

1)ஸமசிரஸ் (ஸமம்)
2)உதவாஹிதம் 
3)அதோமுகம் 
4)ஆலோலிதம் 
5)துதம் 
6)கம்பிதம்ச்ச 
7)பராவிருத்தம் 
8)உத்க்ஷிப்தம் 
9)பரிவாஷிதம்   என 9 விதங்களாகும் 



1)ஸமசிரஸ் (ஸமம்)

தலை உயர்த்தாமலும் ,தாழ்த்தாமலும் ,அசைக்காமலும், நேராக வைத்திருத்தல் 

விநியோகம்  

விசுவாசம் ,கோபம்,கர்வம் ,வேலையற்றிருத்தல் 


2)உதவாஹிதம் 

தலையை அண்ணாந்து  வைத்து கொள்ளுதல்


 விநியோகம் 
சந்திரன் ,ஆகாசம் ,ஆகாசத்தில் சஞ்சரிக்கும்  வஸ்த்துக்கள் இவற்றை பார்ப்பதிற்கு உபயோகமாகும்



3)அதோமுகம் 

தலையை கீழே பார்த்தல் 


விநியோகம் 

வெட்கப்படுதல் வருத்தப்படுதல் நமஸ்கரித்தல் கேட்ட யோசனை செய்தல் கீழிருக்கும் பொருட்களை பார்த்தல் ஸ்நானம் செய்தல் இவைகளிற்கு உபயோகமாகும் 


4)அலோலிதம் 

தலையை மண்டலாகாரமாகச்சுற்றுதல் 


விநியோகம் 

பெரும் துக்கம் பிசாசு பிடித்து ஆடுதல் மூச்சையடைத்திருத்தல் கிறு கிறு என்று சுற்றுதல் சிரிப்பு ஆகியவற்றிக்கு உபயோகிக்கலாம்   



5)துதம் 

வலது இடது பக்கமாக தலையை திருப்புதல் 

விநியோகம் 

இல்லை எனல்  இரு பக்கங்களில் பார்த்தல் பயப்படுதல் குளிர் ஆசையற்றிருத்தல் எரிச்சல்  வேண்டாம் என கூறல்  கூடாது எனல் கோபம் தன் புறத்தைத்  தான் பார்த்தல்  பக்கத்தில் இருப்பவர்களை அழைத்தல் என்ற காரியங்களில் உபயோகமாகும் 


6) கம்பிதம்

மேலும் கீழுமாக தலையை அசைத்தல் 


விநியோகம் 

கோபம்  இரு எனல் கேள்வி கேட்டல் திகில் அடைதல் இவற்றில் பயன்படும் 


7)பராவிருத்தம் 

பக்கத்தில் தலையை திருப்புதல் 


விநியோகம் 

அப்படிச் செய் எனல் கோபம் வெட்டப்படுதல் முகத்தை திருப்புதல் இவைகளிற்கு உபயோகிக்கலாம் 

8)உத்க்ஷிப்தம் 

தலையை ஆகாயம் பார்க்க திருப்பி இரு பக்கங்களிலும் அசைத்தல் 


விநியோகம்

போஷித்தல் சம்மதித்தல் ஜாடை செய்தல் போ முதலியவற்றிலும் உபயோகிக்கலாம் 
9)பரிவாஷிதம் 

சாமரம் போல் வேகமாக இரு பக்கங்களிலும் தலையை அசைத்தல் 

விநியோகம் 

விரஹம் மோஹரம் துதித்தல்  விசாரப்படுத்தல் இவற்றிற்கு பயன்படுத்தலாம் 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்