4:5)சிரோ திருஷ்டி க்ரிவாபேதங்கள்-2

 திருஷ்டி பேதங்கள் கண்களின் அசைவுகள்)

இது எட்டு வகைப்படும் 

1)சமம் 
2)ஆலோகிதம் 
3)ஸாசி 
4)ப்ரலோகித 
5)நிமீலித்தே 
6)உல்லோலித 
7)அனவித்தேச்ச 
8)அவலோகித 


1)சமம் 

கண் இமைக்காமல் விழித்தப்படி  இருத்தல் 

விநியோகம் 

நாட்டிய ஆரம்பம்  தராசு முனை பார்த்தல் நிச்சயித்தல் ஆச்சரியம் தேவதையின் உருவம் காட்டுதல் என்பவற்றை குறிக்கும் 


2)ஆலோகிதம் 

கண்ணை வேகத்துடன் சக்கரமாய் சுற்றி நன்றாகப் பார்த்தல் 


விநியோகம் 

குயவன் சக்கரம் சுற்றுதல் எல்லாவஸ்த்துக்களையும் காண்பித்தல் ஆகியவற்றிற்கு உபயோகிக்கலாம் 



3)ஸாசி 

இருக்கிறபடி பார்வையை நிறுத்திப் கலைக்கண் பார்வை பார்த்தல் 

விநியோகம் 

அபிப்பிராயப்படுதல்  மீசையை  தொடுதல் குறிப்புக்காட்டல் என்பவற்றிற்கு பயன்படுத்தலாம் 


4)ப்ரலோகித 

கண்ணை இருபக்கங்களிலும் அசைத்தல் 

விநியோகம் 

இரு பக்கங்களிலும் இருக்கும் வஸ்த்துக்களை பார்த்தல் பேதப்படுத்தல் அசைத்தல் இவற்றிற்கு உபயோகிக்கலாம் 

5)நிமீலித்தே 

அரைக்கண் மூடியிருத்தல் 

விநியோகம் 

ரிஷிவேஷம் பரவசமாகுதல் ஜெபித்தல் தியானித்தால் நமஸ்கரித்தல் பெருமையடைதல் இவற்றிற்கு உபயோகமாகும் 


6)உல்லோலித 

உயர பார்க்கும் பார்வை 

விநியோகம் 

கொடிநுனி கோபுரம் தேவமண்டபம் முன்ஜென்மம் என்பவற்றிக்கு பாவிக்கலாம்  


7)அனவித்தேச்ச 

அதி வேகத்துடன் மேலும் கீழும் பார்த்தல் 

விநியோகம் 

கோபத்துடன் பார்த்தல்  பிரியத்தோடு அழைத்தல் இவற்றிற்கு பயன்படுத்தலாம் 

8)அவலோகித

கீழ் பார்வை பார்த்தல் 

விநியோகம் 

நிழல் சாயலை  பார்த்தல் படுக்கை படித்தல் போன்றவற்றிக்கு பயன்படுத்தல் 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்