4:6 நடனக் கலைஞரின்பாத்திரலட்சணம்

அங்க அமைப்பும் குணாதிசயங்களும் 

சிவந்த மேனியுடன் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஒளியுடைய முகத்தை உடையவளாகவும் மிக பருத்தல்  மிக இளைத்தல் மிக உயரம் மிக குறுகள்  இல்லாத உடலும் தக்க ரூபமும் உத்தம தனங்களுடன் அறிவு உரம் பெற்றவளாயும் மனோகரம் தாள சுரஞானம் விசாரநேத்தியம் ஒருங்கே அமைந்த முகமலர்ச்சி கொண்டவளாகவும் கஸ்த அங்க வினயாங்களை   நன்கு தெரிந்தவளாகவும் தாள சுருதி தவறாது சொற்களை ஒங்க அடித்து பிறகு தான் பெற்ற கல்வியை மறவாமல் சாஸ்திர விசாரணையில்  கருத்தை ஊன்றி பித்து நோய் சலிப்பு மெலிவு பின் செல்லுதல் முதலிய குற்றங்கள் இல்லாமல் பக்தியுடன் மதுரவாசகம் பேசி இசை நிறைந்த பாடலை பாடும் இனிய குரலை பெற்றவளாகவும் கோபமில்லாமல் துறவிகள் ஆசான்  தெய்வம் இவர்களிடம் பக்தி கொண்டவளாகவும் இருப்பவளே உத்தம நடிகைக்கு உரியவள் மற்றும் இத்தகையவள் சபையினருக்கு முன்னே கீழ் திசையில் திரையை நீக்கி எழுந்த பூரண சந்திரன் போலவும் பூத்த  வஞ்சிக்கொடி போலவும் கார்மேகம் கிழித்து மின்னல் வெளிப்பட்டது  போலவும்  விளங்குவாள்   

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்