4.8 வினியோகங்கள்-5
மயூரஹஸ்த விநியோகம்
ஸ்லோகம்
மயூராஸ்யே லதாயாம்ச்ச, ஷகுனே, வமனேத்ததா, அலகஸ்யாப்பநயனம், லலாட்ட, திலகேச்சு, நத்யுதகஸ்ய நிர்ஷேயே சாஸ்திர வாசகே பிரசித்தகே ஏலம் அர்தேசூ யுஜ்ஜதே மயூரகர பாவனாக.
கருத்து
மயூராஸ்யே மயில்
லதாயாம்ச்ச கொடி
ஷகுனே சகுனப்பறவை
வமனேத்ததா வாந்தி எடுத்தல்
அலகஸ்யாப்பநயனம் மயிரில் சிக்கு எடுத்தல்
லலாட்ட கண் மை
திலகேச்சு பொட்டிடுதல்
நத்யுதகஸ்ய நிர்ஷேயே ஆற்று நீர் தெளித்தல்
சாஸ்திர வாசகே சாஸ்திரத்தைப் பற்றி விவாதித்தல்
பிரசித்தகே பிரசித்தம்