5:3:1) கீர்த்தனை -01
கீர்த்தனை
இறை இசைப் பகுதியைச் (வைதீக கானத்தை) சேர்ந்தது. சாகித்யம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் சுரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகுதியே (மாதுவே) முக்கியமானது என்று கருதப்படுகிறது
கீர்த்தனைக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உண்டு. இந்த சரணங்கள் எல்லாம் ஒரு வகையான சுரப் பகுதியைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் பல்லவிக்குரிய சுரப்பகுதியே சரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது