5.3.கீர்த்தனம்-1

3)கீர்த்தனம் - 1

ஒரு பரதநாட்டிய நிகழ்வில் பதத்திற்கு அடுத்ததாக ஆடப்படும் நடனம் கீர்த்தனம் ஆகும் இக் கீர்த்தனைகள் தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு ஆகிய மொழிகளில் அமைந்துள்ளன கீர்த்தனையானது பல்லவி அனுபல்லவி சரணம் ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது  சில கீர்த்தனைகளில் அழகான ஜதிகள் அமைந்துள்ளதை நாம் காணலாம் சில நேரங்களில் கற்பனாஸ்வரங்களும் பாடப்படுகின்றன அத்துடன் அடவுக்கோர்வைகளும் பாவங்களும் செய்யப்படுகின்றன கீர்த்தனைகள் பொதுவாக இறைவனுக்காக பாடப்படுகின்றன சில கீர்த்தனைகளில் வீர உணர்ச்சியை தோற்றுவிக்கவும், பெரியோர்களின் குணங்களை எடுத்துக்காட்டவும் ,நாட்டுவளம் ,கலை ,கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி பாடப்பட்டிருக்கும் சில கீர்த்தனைகளின் இறுதியில் தனது பெயரையோ அல்லது புனைப்பெயரையோ சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம் கீர்த்தனையில் சாகித்தியம் முக்கியமானதாகும் 

இதனை எழுதியவர் 
                                தியாகராஜா 
                                 கோபாலகிருஷ்ணபாரதி 
                                 மீனாட்சி சுந்தரம்பிள்ளை 
                                  பாபநாசசிவம் 
                                 பொன்னையாபிள்ளை 

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்