5.5கால்களின் அனைத்து அசைவுகளும்-1

அறிமுறை 

1) கால்களின் அனைத்து அசைவுகளும்



ஸ்லோகம் 


மண்டலோத் ப்லவனே சைவ ப்பிரமரீ  பாத சாரிகா சதுரித்தா பாத  பேதாஹஸ்யுஸ்தேஷாம் லட்சண முஜ்உத்பிலவன ஜதே

பாத பேதங்கள் நான்கு வகைப்படும் 

 அவையாவன 

1)மண்டலபேதம் 
2)உத்பிலவனபேதம் 
3)ப்ரமரீபேதம்    
4)சாரிபேதம் 

செய்முறை விளக்கம் 


)மண்டல பேதம்

இடுப்பில் இருகைகளையும் வைத்து இரு பாதங்களையும் சேர்த்து சம நிலையில் நிற்றல் 


ஆ )உத்பிலவனபேதம் 

    இடதுகை கட்டகாமுக முத்திரையை தலைக்கு மேல் நீட்டி பிடித்து வலது கையில்   கட்டகாமுக முத்திரையை மார்பின் முன் பிடித்த வலது காலை மடித்து முன் பாய்ந்து அரைமண்டி இருத்தல் பாயும்போது கட்டகாமுக முத்திரையை நீட்டி அலபத்மமாக்க வேண்டும் 


இ)ப்ரமரீபேதம்   

  நின்றபடி இடது காலை பின் நாட்டி வலது கை அலபத்மத்தை வலது முன் மூலைக்கு  நீட்டிசுற்றி வரும்  போது வலது கையை வட்டமாகக் கொண்டு வருதல் 

   

ஈ )சாரிபேதம் 
              
  இடுப்பில் கைகளை வைத்தவாறு நான்கு தரம் முன்னே நடத்தல்   
               

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்