5.5கால்களின் அனைத்து அசைவுகளும்-5

ப்ரமரீ  பேதம்  

ஸ்லோகம் 

உத்புலுத்த   ப்ரமரீ சக்ர ப்ரமரீ  கருடாபிதா தனாதக பாத ப்ராமரீ குஞ்சித  ப்ராமரீத்தா ஆகாஷ் ப்ராமரீ சைவ தாதாஸ்க ப்ராமரீ திச்ச ப்ராமரீபஹி ஸப்த விக்ஞேப நாட்டியச  ரஸ்திர  விஷாரதஹி  

செய்முறை 

உத்புலுத்தப்ரமரீ    

              இடுப்பில் கைகளை வைத்து கால்களை மடித்து பாய்ந்தவாறு 
சுற்றிவருதல் 


சக்ரப்ரமரீ

           இடுப்பில் இரு கைகளையும் வைத்து கொண்டு இரு கால்களாலும் மாறி மாறி  நிலத்தை தேய்த்து சக்கரம் போட்டு சுற்றுதல் 


கருடப்ராமரீ 

          கைகளில் கருடஹஸ்தம்  பிடித்து அசைத்தபடி இடது காலை மடித்து வலது காலில் ஒரு சுற்று சுற்றி வருதல்   


ஏகபாதப்ராமரீ 

           இடது கையில் கட்டகாமுக முத்திரை தலைக்கு மேலும் வலது கை அலபத்மம் வலது பக்க முன் முலையில் நீட்டியும் பிடித்துப் பின்  நீட்டிய  கையினால் வட்டம் போடல் இடது காலை நின்றவாறு நீட்டி வலது காலை தூக்கி சுற்றுதல் 


 குஞ்சிதப்ராமரீ

            அரைமண்டி நிலையில் இடது காலை தட்டி வலது காலை தூக்கி உள்  வளைத்தவாறு ஒரு சுற்று சுற்றல் சிவனுக்குரிய காய் பிடித்தல்  
            

ஆகாஷப்ராமரீ 

           இரண்டு கைகளிலும் பதாக முத்திரையை  பிடித்து பக்கவாட்டில் நீட்டியபடி கால்களை விரித்தபடி எழும்பி பாய்ந்தவாறு  சுற்றி வந்து சம நிலையில் நிற்றல் கைகளை முன்பு போல் உடம்போடு சேர்த்து வைத்தல்


அங்கப்ரமரீ 

            அரை மண்டியில் சற்றே பாதங்களை அகல் வைத்து இருந்தபடியே (இடுப்புக்குமேல் )உடம்பால் ஒரு வடடம் போடுதல் அத்துடன் கைகள் இரண்டினையும் இடுப்பில் வைத்திருக்கவேண்டும் 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்