5.5 கால்களின் அனைத்து அசைவுகளும்-6

கால்களின் அனைத்து அசைவுகளும்

ஈ)சாரி பேதம்

ஸ்லோகம் 

ஆதௌது சலனம் ப்ரோக்தம் பஸ்யாத் சக்ர மணம் ததா
சரணம் வேகினி சைவ குட்டணம்  சததஹ் ப்ரம்
லுடிதம் லோலிதம் சைவ ததோ விஷமசஞ்சரஹ 
சாரி  பேதா அமீ அஷ்டௌ  ப்ரோக்தா பரதபே  திபீஹி 

செய்முறை 


ஆதௌது சலனம்

          கைகளை இடுப்பில் வைத்து நான்கு நடை முன் நடத்தல் 


 ப்ரோக்தம் பஸ்யாத் 

       தெய்  தெய் திதி தெய் அடைவை  இரு பக்கமும் செய்தல் 


  சக்ரமணம்

         கைகளை தலைக்கு மேல் இடது கை சூசி  முத்திரையையும்  வலது கையில் முஷ்டி  முத்திரையையும் பிடித்தவாறு இரு கைகளையும் சேர்த்து பிடித்து கால்களை மாறி மாறி முன்னுக்கும் பக்கங்களுக்கும் நீட்டி வீசி  நின்றவாறு செய்தல் 


சரணம்

          ஆலிட  நிலையில் பாதங்களை வைத்து கால்களை தலைக்கு மேல் இடது கை சூசி வலது கை முஷ்டி முத்திரையையும் சேர்த்து பிடித்து வலது காலால் சறுக்கி முன்னே நகர்ந்து செல்லல் 


வேகினி 

         கால் விரல்களால் முன் நோக்கி ஓடுதல் ,ஓடும் போது மார்புக்கு முன் இரு கைகளிலும் முகுல முத்திரை பிடித்து அலபத்மமாக மாற்றி முன் நீட்டவேண்டும் 

குட்டணம் 

           கைகளை மார்பின் முன் சுவஸ்திஹஸ்தம்  பிடித்து கால்களை சுவஸ்திஹஸ்த நிலையில் வைத்து இரு தரம் குத்துதல் 


 லுடிதம் லோலிதம்

         மூன்றாவது தா தெய்  தெய் த  அடவினை ஒருமுறை முழுமையாக செய்தல் 


விஷமசஞ்சரஹ

      கால்களை மாறி மாறி நிலத்துடன் தேய்த்து சர்ப்ப நடை போல் முன் நடத்தல் 


   

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்