1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் (உதாரணங்களுடன் ஜன்னிய ராகத்தின் பிரிவுகள் குறிப்பிடவேண்டும்) ராகங்கள் ராகங்கள்என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் -) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்த எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர...
இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது தாளம் ஆகும். கர்நாடக இசையில் தற்போது ஏழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். "சப்தம்" என்பது வடமொழியில் எழு என்று பொருள்படும். ஏழு தாளங்கள் துருவ தாளம் மட்டிய தாளம் ரூபக தாளம் ஜம்பை தாளம் திரிபுடை தாளம் அட தாளம் ஏக தாளம் தாள உறுப்புக்கள் தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன: 1. லகு 2. அனுதிருதம் 3. திருதம் 4. குரு 5. புளுதம் 6. காகபாதம் லகு என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு பாகம் ஆகும். லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும்.இதன் அடையாளம் | ஆகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம க...
12 ஸ்வரஸ்தான விபரமும் - சட்ஜப் பஞ்சமத்தைத் தவிர மீதிய ஐந்து ஸ்வரங்கள் கோமள, தீவர பேததிற்குட்படுத்தப் படுகின்றன. இதனால் விக்ருதி ஸ்வரங்கள் 5x2=10 ஸ்வரஸ்தானங்களுடன் பிரகிருதி ஸ்வரங்களான "ஸ", "ப" ஆகிய இரண்டும் சேர்ந்து 10+2=12 ஸ்வரஸ்தானங்கள் உண்டாகின்றன. இந்த 12 ஸ்வரஸ்தானங்கள் பின்வருவனவற்றில் விளக்குகின்றன: 1) சட்ஜம் (ஸ) 2)சுத்த ரிஷபம் (ரி1)- கோமள 3)சதுஸ்ருதி ரிஷபம் (ரி2) -தீவர 4)சாதாரண காந்தாரம் (க1) -கோமள 5)அந்தர காந்தாரம் (க2) -தீவர 6)சுத்த மத்யமம் (ம1) -கோமள 7)பிரதி மத்யமம் (ம2) -தீவர 8)பஞ்சமம் (ப) -சுத்த 9)தைவதம் (த1) -கோமள 10)சதுஸ்ருதி தைவதம் (த2) -தீவர 11)கைசிகி நிஷாதம் (நி1) 12)கோமள காகலி நிஷாதம் (நி2) -தீவர 16 ஸ்வரப் பெயர்களும் - மேற்கண்ட 12 ஸ்வரஸ்தானங்களில் சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய ஸ்வரஸ்தானங்கள் இரட்டைப் பெயர்களுடன் விளங்குகின்ற காரணத்தால் 12+4 = 16 ஸ்வரப் பெயர்கள் உண்டாகின்றன. இரட்டைப் பெயர்களுடன் விளங்கும் ஸ்வரஸ்தானங்கள் - சதுஸ்ருதி ரிஷபம் = சுத்த காந்தாரம் - சாதாரண காந்தா...