இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாய்ப்பாட்டு வினாத்தாள் -5

பகுதி 1 பின்வருவனவற்றுள் 6சரியான விடையினை  கொடுக்கப்பட்டுள்ள கோட்டில் எழுதுக  1)பூர்வ மேளகர்த்தாக்கள் எத்தனை சக்கரங்களில் அடைக்கப்பட்டுள்ளன ? அ) 6          ஆ) 8          இ) 12          ஈ) 18 -------------------     2)கீழே தரப்பட்டுள்ளவற்றுள் ஔடவ சம்பூர்ண ராகம் எது ? அ )ஹம்சத்வனி           ஆ)காம்போஜி           இ)ஆனந்தபைரவி  ------------------------------------------- 3)எவ்வித எடுப்பில் தாளம்  தொடங்கும் முன் பாட்டு ஆரம்பிக்கிறது ? அ)சமம்           ஆ)அனாகத           இ)அதீதம்  -------------------------------------- 4)தாளம் அமைக்கப்பட்டுள்ள இராகத்தினது லட்சணத்தை எடுத்து கூறும்  உருப்படி எது ? அ)சஞ்சாரி கீதம்           ஆ)சாமன்ய கீதம்           இ)லட்சண கீதம்  -----------------------------...

வாய்ப்பாட்டு வினாத்தாள் -4

படம்

வாய்ப்பாட்டு வினாத்தாள் -3

படம்
 

வாய்ப்பாட்டு வினாத்தாள் -2

படம்

வாய்ப்பாட்டு வினாத்தாள்:1

படம்

4:10)கீதத்தின் லக்ஷணம்

கீதத்தின் லக்ஷணம் கீதம் என்பது இசை சாகித்தியம் இரண்டினதும் சேர்க்கை  எனக்  கருதப்படுகிறது .இது இசை உருப்படிகளுள்  மிகவும் எளிதானது .இது அப்பியாச வரிசைகளில் ஒன்று . அப்பியாச வரிசைகளை  அடுத்து சாகித்திய ரூபமாக அமைந்த முதல் உருப்படி இதுவாகும் . எளிய வர்ண மெட்டில்இது அமைந்திருக்கும்  இதற்கு பல்லவி ,அனுபல்லவி, சரணம்  என்ற  அங்க வித்தியாசங்கள் இல்லை .சங்கதிகள் . கடினமான வக்ர பிரயோகங்கள்  இதில் காணப்படாது .தாதுக்கள் இலகுவான நடையில்  அமைந்திருக்கும் .ஆஇய ,திஇய,வஇய  போன்ற அர்த்தமற்ற சொற்கள் கீதங்களில் காணப்படும் .இவை மாத்ருகாபதம் அல்லதுகீதாலங்காரச்  சொல்  எனப்படும்  .தமிழிலும் , தெலுங்கிலும் , வடமொழியிலும் ப ல  கீதங்கள் இயற்றப்பட்டுள்ளன கீதம் ஆரம்பம் முதல்  முடிவு வரை தொடர்ச்சியாகப் பாட வேண்டும் இதில் சங்கதிகள் கிடையாது , ஒவ்வொரு ஸ்வரத்திற்கும்  சாகித்தியத்தில் ஒரு எழுத்துத் தான் இருக்கும் .  உதாரணம்  ஸர...

4:9)தாள எடுப்பு (கிரஹாம்) சமம் அதீதா அனாகதம்

தாள எடுப்பு (கிரஹாம்)   பாடல் தொடங்கும் ஒரு  தாள   வில் "கிரஹாம்" என்று அழைக்கப்படுகிறது. இது "எடுப்பு" என்றும் அழைக்கப்படுகிறது. எடுப்பு என்றால் "தொடக்க புள்ளி" என்று பொருள்.  எடுப்பு இரண்டு வழிகளாக இருக்கலாம்.  1)சமம்  2)விஷமம்                                 சமம்   ஒரு தாலாவின் முதல் துடிப்பில் ஒரு பாடல் தொடங்கும் போது, ​​அது சமம்.                        விஷமம் தலாவின் பக்கவாதத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ பாடல் தொடங்கும் போது, ​​அது விஷமம்.  விஷமத்தை மேலும் இரண்டாக வகைப்படுத்தலாம்.               (அ) ​​அதீதம்  பாடல் முதலில் தொடங்கும் போது, ​​அதைத் தொடர்ந்து தாலா துடிக்கும்போது, ​​அது "அதிதா எடுப்பு" என்று அழைக்கப்படுகிறது.             (ஆ) அனாகதம் ஒரு தாலா முதலில் தொடங்கி, பின்னர் பாடல்...

4:8) பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம்

4) பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம்  1)ஹம்சத்வனி -    ஆரோகணம் :      ஸ ரி 2  க 3  ப நி 3  ஸ்   அவரோகணம் : ஸ் நி 3  ப க 3  ரி 2  ஸ 2) காம்போஜி -      ஆரோகணம் :    ஸ ரி க ம ப த ஸ்    அவரோகணம் :  ஸ் நி த ப ம கரி ஸ 3) ஆனந்தபைரவி -    ஆரோகணம் :     ஸ க 2  ரி 2  க 2  ம 1  ப த 1  ப நி 2  ஸ்    அவரோகணம்:  ஸ் நி 2  த 1  ப ம 1  க 2  ரி 2  ஸ 4) பிலாஹரி -    ஆரோகணம் :     ஸ ரி க ப த ஸ்   அவரோகணம் :  ஸ் நி த ப ம க ரி ஸ

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்

படம்
12 ஸ்வரஸ்தான விபரமும் -   சட்ஜப் பஞ்சமத்தைத் தவிர மீதிய ஐந்து ஸ்வரங்கள் கோமள, தீவர பேததிற்குட்படுத்தப் படுகின்றன. இதனால் விக்ருதி ஸ்வரங்கள் 5x2=10 ஸ்வரஸ்தானங்களுடன் பிரகிருதி ஸ்வரங்களான "ஸ", "ப" ஆகிய இரண்டும் சேர்ந்து 10+2=12 ஸ்வரஸ்தானங்கள் உண்டாகின்றன.  இந்த 12 ஸ்வரஸ்தானங்கள் பின்வருவனவற்றில் விளக்குகின்றன: 1) சட்ஜம் (ஸ) 2)சுத்த ரிஷபம் (ரி1)- கோமள 3)சதுஸ்ருதி ரிஷபம் (ரி2) -தீவர 4)சாதாரண காந்தாரம் (க1) -கோமள 5)அந்தர காந்தாரம் (க2) -தீவர 6)சுத்த மத்யமம் (ம1) -கோமள 7)பிரதி மத்யமம் (ம2) -தீவர 8)பஞ்சமம் (ப) -சுத்த 9)தைவதம் (த1) -கோமள 10)சதுஸ்ருதி தைவதம் (த2) -தீவர 11)கைசிகி நிஷாதம் (நி1) 12)கோமள காகலி நிஷாதம் (நி2) -தீவர 16 ஸ்வரப் பெயர்களும் - மேற்கண்ட 12 ஸ்வரஸ்தானங்களில் சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய ஸ்வரஸ்தானங்கள் இரட்டைப் பெயர்களுடன் விளங்குகின்ற காரணத்தால் 12+4 = 16 ஸ்வரப் பெயர்கள் உண்டாகின்றன.  இரட்டைப் பெயர்களுடன் விளங்கும் ஸ்வரஸ்தானங்கள் -  சதுஸ்ருதி ரிஷபம் = சுத்த காந்தாரம் - சாதாரண காந்தா...

4:6:2 ஜன்னிய ராகங்கள்

ஜன்னிய இராகங்கள்   என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர் ஜன்னிய இராகங்கள் கணக்கில் அடங்காதன.  இவற்றை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன:   ஜன்னிய சம்பூர்ண இராகம் (வர்ஜமற்ற இராகம்).  வர்ஜ இராகம்.  வக்ர இராகம்.  உபாங்க, பாஷாங்க இராகம்.  நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்கள்    ஜன்னிய சம்பூர்ண இராகம்  ஆரோகணமும் அவரோகணமும் சம்பூர்ணமாக உள்ள ஜன்னிய இராகம், ஜன்னிய சம்பூர்ண இராகம் ஆகும்.  உ+ம் :  பைரவி  ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ்  அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ   வர்ஜ இராகம்  ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும்.  அதுவே வர்ஜ இராகம் ஆகும். இவ்வாறு விலக்கப்பட்ட ஸ்வரங்களிற்கு வர்ஜ ஸ்வரங்கள் எனப்பட...

4:6:1)மேளகர்த்தா இராகங்கள் (ஜனக இராகங்கள்)

ராகம்    பொதுவாக  இருவகைப்படும் ஏழு ஸ்வரங்களுமுடைய மூலராகம். ஜனகரகம் 1) தாய் ராகம் (ஜனக ராகம் அல்லது மேளகர்த்தா ராகம்) 2)குழந்தை ராகம் (ஜன்ய ராகம்)  கர்நாடக சங்கீதத்தில் இந்தத் தாய் ராகங்கள் மொத்தம் 72 தான்  அவற்றிலிருந்தே அனைத்துக் குழந்தை ராகங்களும் பிறக்கின்றன மேளகர்த்தா இராகங்கள் (ஜனக இராகம்) கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும்.  வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.  இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர்.  பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான்,  இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன,  இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது. ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்கள...

4:6)ராகங்கள்

ராகங்கள் ராகங்கள்என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது   இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் -) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்த  எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது  ஸ்வரங்கள் ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது...

4:5)72 மேளகார்த்த ராகங்களைப் பற்றிய அடிப்படை அறிவு

72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சரிசமமான பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.  முதல் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு  பூர்வ மேளகர்த்தாக்கள்  என்றும் இரண்டாம் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு  உத்தர மேளகர்த்தாக்கள்  என்றும் பெயர். 1-36 மேளகர்த்தாக்களில் சுத்த மத்திம சுரமும், 37- 72 மேளகர்த்தாக்களில் பிரதி மத்திம சுரமும் வருவதால் பூர்வ மேளகர்த்தாக்களை  சுத்த மத்திம மேளகர்த்தாக்கள்  என்றும், உத்தர மேளகர்த்தாக்களை  பிரதி மத்திம மேளகர்த்தாக்கள்  என்றும் அழைப்பர். பூர்வ பாகத்திலும், உத்தர பாகத்திலும் மேளகர்த்தா இராகங்கள் ஒரே விதமான வரிசை முறைப்படி வருகிறன. 72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களின் கீழ் வகுக்கப் பட்டிருக்கின்றது. அவையாவன: இந்து  - சந்திரனுக்கு இந்து மறு பெயர். ஒரே ஒரு சந்திரன் இருக்கயில், முதல் சக்கரத்தின் பெயர் இந்து. நேத்ர  - நேத்ர என்பது கண்களை குறிக்கும். அதிகமான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கண்கள் இரண்டு. ஆதலால் இரண்டாம் சக்கரத்திற்கு இந்த பெயர் சூட்டபட்டிருக்கிறது. அக்னி  - மூன்று வகை அக்னிகள...

4:4:2 திருப்புகழ் - 02

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி   ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி  இன்பரசத் தேபருகிப் பலகாலும்   என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் காகவனத் தணைவோனே  தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே  அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே   ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

4:4:1திருப்புகழ் - 01

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே  ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே  கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே  குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே  மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே  வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே  ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்  ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

4:3:2கீர்த்தனம்( ரூபக தாளம்) - 02

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா  ராகம்:- ஆபோஹி  தாளம்:-ரூபகம்   பல்லவி   சபாபதிக்கு வேறு தெய்வம்  சமானமாகுமா  தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம்  சமானமாகுமா( சபாபதிக்கு)    அனுபல்லவி   கிருபாநிதி இவரைப்போல  கிடைக்குமோ  இந்த தரணி தன்னில் (சபாபதிக்கு..)   சரணம்   ஒருதரம் சிவசிதம்பரம் என்றால்  சொன்னால் போதுமே  பரகதிக்குயடைய வேறே புண்ணியம்  செய்யவேண்டாமே  அரிய புலையர் மூவர் பதம் அடைந்தார்  என்றே புராணம் சொல்லக்கேட்டோம்  கோபலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)

4:3:1கீர்த்தனம்( ரூபக தாளம்) - 01

ஆனந்த நடமாடுவார் தில்லை ராகம்:- பூர்விகல்யானி  தாளம் :-ரூபகம் பல்லவி ஆனந்த நடமாடுவார் தில்லை அம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......) அனுபல்லவி தானந்தமில்லாதா ரூபன் தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....) சரணம் பாதி மதி ஜோதி பளீர் பளீரென பாதச்சிலம்புகள் கலீர் கலீரென ஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன ஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என அண்டமும் பிண்டமும் ஆடிட எண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த...)

4:2:3கீர்த்தனம்(ஆதி தாளம் ) -03

ராகம்: ஆந்தோளிகா / ஆபோகீ  தாளம்: ஆதி  பல்லவி சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா  அநுபல்லவி சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்  தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு  சரணம் 1  காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை  சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை  சரணம் 2  சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ  சரணம் 3 சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத் தில்லைத் தாண்டவ ராயனை  சரணம் 4  நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும் தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்

4:2:2கீர்த்தனம்(ஆதி தாளம் ) -02

ராகம்: மாயாமாளவ கௌளை   தாளம்: ஆதி   பல்லவி  ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ  அனுபல்லவி  நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்   சரணம் 1  பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப் பொங்குமுடனே உரித்து சரித்த புலித்தோல் அசைந்தாட  செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை கண் முயலகனாட கங்கை இளம்பிறை செஞ்சடையாடக் கனக சபைதனிலே   சரணம் 2  ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவும் படம் விரித்தாட  சீரணி கொன்றை மலர்த்தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட   பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும்   பூஜித்துக்கொண்டு நின்றாடக் கனக சபைதனிலே   சரணம் 3  நிர்த்த கணபதி வேலர் நின்றாட நின்றயன் மாலொடு இந்திரன் ஆட முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட   மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட

4:2:1கீர்த்தனம் -01

கீர்த்தனை    இறை இசைப் பகுதியைச் (வைதீக கானத்தை) சேர்ந்தது. சாகித்யம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும்.  புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் சுரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகுதியே (மாதுவே) முக்கியமானது என்று கருதப்படுகிறது.  கீர்த்தனைக்குப் பிறகு தான் கிருதி என்ற இசைவடிவம் தோன்றியது. கீர்த்தனைக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உண்டு. இந்த சரணங்கள் எல்லாம் ஒரு வகையான சுரப் பகுதியைக் கொண்டிருக்கும்.  சில சமயங்களில் பல்லவிக்குரிய சுரப்பகுதியே சரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப்பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும் கீர்த்தனைகளை இயற்றியோர்   தியாகராஜர்  முத்துசாமி தீட்சிதர்  சியாமா சாஸ்திரிகள்  நரசிங் மேத்தா  புரந்தரதாசர்  ராமதாசா் ...

4:1:2) ஆதி தாள வர்ணம் - 02

படம்

4:1:1 ஆதி தாள வர்ணம் - 01

படம்

பாடத்திட்டம் - தரம் - 4,

தரம் 1,2,3 ற்கான விடையங்களுடன் தரம் 4 ற்கான   1)செயல்முறை 1)ஆதி தாள வர்ணம் - 02 2) கீர்த்தனம்(ஆதி தாளம் ) - 02 3)கீர்த்தனம்( ரூபக தாளம்) - 02 4)திருப்புகழ் - 02  2) அறிமுறை  1)72 மேளகார்த்த ராகங்க ளை ப் பற்றிய அடிப்படை அறிவு 2)ஜனக ஜன்னிய ராகங்கள் 3)12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்க ளு ம்  4)  பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம்  1)ஹம்சத்வனி - 2) காம்போஜி -  3) ஆனந்தபைரவி - 4) பிலாஹரி - 5)தாள எடுப்பு (கிரஹாம்) சமம் அதீதா அனாகதம் 6)கீதத்தின் லக்ஷணம்

பரதநாட்டியம் வினா -6

பகுதி 1 எல்லா வினாக்களுக்கும் விடை தருக  1)புவனம் என்பதன் கருத்து என்ன ? அ )உலகம்  ஆ )உடம்பு  இ )சிவன்  ஈ )ஆபரணங்கள்  2)தீர்மானம் அலாரிப்பில் எங்கு வருகின்றது ? அ )ஆரம்பத்தில்  ஆ )முடிவில்  இ )இடையில்  ஈ )மூன்றிலுமில்லை  3)கோலாட்டம் என்பது ? அ )கதகளி நடனம்  ஆ )குச்சுப்பிடி நடனம்  இ )பரதநாட்டியம்  ஈ )கிராமிய நடனம்  4)மண்டியிடவு செய்யும் போது நிலை என்ன ? அ )நேராக நிற்றல்  ஆ )அரைமண்டி  இ )முழுமண்டி  ஈ )நாட்டியாரம்பம்  5)முஸ்டிஹஸ்தத்தை பிடித்து பெருவிரலை நீட்டினால் வரும் முத்திரை யாது ? அ )சிகரம்  ஆ )சூசி  இ )அர்த்தப்பதாகம்  ஈ )சுகதுண்டம்  6) 6 வது தட்டடவின் தாளம் என்ன ? அ )ஆதி  ஆ )ரூபகம்  இ )சாபு  ஈ )அட  7)பரதநாட்டியத்தின் உட்பிரிவுகள் எத்தனை ? அ) 3 ஆ) 4 இ) 2 ஈ) 6 8) நமஸ்காரத்தின் போது   உபயோகப்படுத்துகின்ற   முத்திரைகள்            எத்தனை ?   அ) 6 ஆ) 7 இ) 2 ஈ ) 4 9)உத்ஷாங்க அடவிற்கு உபயோகிக்கப்படும் முத்திரை எது...